internet

img

முக கவசங்கள் விளம்பரங்களுக்கு தடை விதித்த பேஸ்புக்!

முக கவசங்கள் விளம்பரங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ், சீனாவை தொடர்ந்து, உலகின் 110 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில், இந்த நோய் தொற்று காரணமாக இதுவரை 3,830 பேர் பலியாகி உள்ளனர். 1,10,000 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படும் நிலையில், நோய் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல நாடுகளில் மருத்துவ முககவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான 'பேஸ்புக்', மருத்துவ முக கவசங்கள் குறித்து விளம்பரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் சிலர், லாப நோக்கத்தில் முககவசம் விற்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. 
 

;